உக்ரைனில் நடந்து வரும் போர் நெருக்கடியின் காரணமாக இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தாக்குதலானது தொடர்ந்து 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. உலகில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில், உக்ரைன் சுமார் 80% பங்கு வகிக்கிறது. தற்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள போரின் காரணமாக எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக சூரியகாந்தி எண்ணெயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உக்ரைனில் இருந்து வரும் சூரியகாந்தி எண்ணெயில் குறிப்பாக தென்னிந்தியாவில் 65 சதவீதம் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கு விலையேற்றம் அதிகமாக உள்ளது. தற்போது சூரிய காந்தி எண்ணெய் விலை ரூ.120 என்ற நிலையில் போர் நீடித்தால், இதன் விலை ரூ.600 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.