Categories
தேனி மாவட்ட செய்திகள்

தானாக வெளியே வந்த குழந்தை…. மயங்கி கிடந்த பெண்…. 5 மணிநேரத்திற்கு பிறகு சிகிச்சை….!!

வீட்டில் தானாகவே பிரசவம் பார்த்து மயங்கி கிடந்த பெண்ணை 5 மணி நேரத்திற்கு பிறகு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிரங்காடு கிராமத்தில் பரமன்(35) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 4 மகள்கள் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். தற்போது ஈஸ்வரி மீண்டும் நிறைமாத கர்ப்பிணியான நிலையில் நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில்மொத்தம்  45 பழங்குடியின மக்களே வசித்து வருவதால் அக்கம்பக்கத்தினர் அனைவரும் கூலி வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த ஈஸ்வரி பிரசவ வலியால் துடித்துள்ளார். மேலும் சிறிது நேரத்திலேயே குழந்தை தானாக வெளியே வந்துள்ளது. இந்நிலையில் உதவிக்கு யாருமே இல்லாத நிலையில் ஈஸ்வரியும் மயக்கமடைந்துள்ளார். இதன்பிறகு இரவு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர்கள் ஈஸ்வரியின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மோடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது ஈஸ்வரிக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |