சிறுமியிடம் நெருங்கி பழகிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் பகுதியில் தரணீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தரணீஷ் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதனையறிந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து காங்கயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் தரணீஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.