Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. பயங்கரமாக மோதிய பேருந்து…. நாமக்கலில் பரபரப்பு….!!

டிராக்டர் கட்டுபாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் மரவள்ளி கிழங்குகளை ஏற்று கொண்டு கலங்கானியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டரின் டிரெயிலர் கழன்றுள்ளது. இதனால் டிராக்டர் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே டிராக்டரில் இருந்து கழன்ற டிரெய்லர் மீது அப்பகுதி வழியாக சென்ற மார்த்தாண்டம்-பெங்களூர் அரசு விரைவு பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் மார்த்தாண்டத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநரான சந்தோஷ் குமார், பயணிகள் ஆரோக்கிய ஜெனிபர், ஜெயமுருகன், விக்ரம், மனோஜ்குமார், ஜெயசுதா ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து புதுசத்திரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |