கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேக்கல் பகுதியில் ஜெஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஜெஸ்டின் வாழ்க்கையில் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெஸ்டின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் ஜெஸ்டினின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் அருகில் உள்ள ஒரு கல்லறை தோட்டத்தில் ஜெஸ்டின் விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த உறவினர்கள் ஜெஸ்டினை உடனடியாக மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெஸ்டின் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.