Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான நிலையில் இருந்த பாலம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தனியார் பேருந்து பாலத்தின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த மண் சாலையில் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கானாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலத்தில் இருபக்கமும் அரிப்பு ஏற்பட்டு பாலம் பயன்படுத்த முடியாமல் ஆபத்தான நிலையில் இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் இரு பக்கமும் ஏற்படுத்தியுள்ள மண்ணரிப்பை சரிசெய்ய தற்காலிகமாக முரம்பு மண்ணை கொட்டி நிரப்பி போக்குவரத்து ஏற்பாடு செய்திருந்த நிலையில் தனியார் பேருந்து பாலத்தின் பக்கவாட்டில் கொட்டப்பட்டிருந்த மண் சாலையில் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை அவசர அவசரமாக பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் விபத்தில் சிக்கிய பேருந்தை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |