பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரமும் கேட்காமல் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா காலங்களில் பாலியல் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என தொடுக்கப்பட்ட வழக்கை, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் எவ்வித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் , பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அடிப்படை அடையாள அட்டை ஆதாரமில்லாமல் ரேஷன் பொருள்கள் இயலாமலும் உள்ள பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையை மாநில அரசுகள் மிகவும் குறைந்த அளவிலேயே தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 6,227 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுவதாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் தேசிய கட்டுப்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து பாலியல் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எவ்வித அடையாள அட்டை ஆதாரங்களும் கேட்காமல் ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும். மாநில அரசுகள் தயாரிக்கும் பட்டியலை ஆய்வுக்கு பிறகு ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்றவற்றை மாநில அரசுகள் வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.