தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதோடு அவர் பங்குச்சந்தை தலைவராக இருந்தபோது இமயமலை சாமியார் ஒருவரின் அறிவுரையின் படி தான் சில முக்கிய முடிவுகளை எடுத்தார் எனவும் செபி வெளியிட்ட தகவலில் கூறப்பட்டிருந்தது. அதோடு மட்டுமல்லாமல் இந்த இமயமலை சாமியாரின் அறிவுரையின்படி 2013ஆம் ஆண்டு ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை பங்குச்சந்தையின் செயல் தலைவராகவும் சித்ரா பாலகிருஷ்ணா நியமித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு பங்குச்சந்தையின் ஆபரேஷன்ஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு வழங்கியுள்ளார். அந்த சமயத்தில் ஆனந்த் சுப்பிரமணியத்தின் மாத சம்பளம் 4.28 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதனையடுத்து சிபிஐயின் சந்தேக வளையத்திற்குள் சித்ரா பாலகிருஷ்ணா சிக்கும்படியான நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து அவருடைய இ-மெயில் உரையாடல்கள் மற்றும் சில ரகசிய தகவல்களை கண்டறிந்த செபி இமயமலை சாமியார் ஒருவரின் அறிவுரையின் படி தான் சித்ரா பாலகிருஷ்ணா எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை உறுதி செய்தது. இது ஒருபுறமிருக்க ஆனந்த் சுப்பிரமணியம் தான் இமயமலை சாமியார் எனவும் சிலர் கூறினர். 2013ம் ஆண்டுக்கு முன்னரே ஆனந்த் சுப்பிரமணியதிற்க்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிற்கும் பழக்கம் இருந்ததாக சிலர் கூறுகின்றனர்.
2013ஆம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணா சென்னையிலுள்ள சீதாம்மா காலனியில் 3.8 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு ஒன்றை விற்பனை செய்துள்ளார். அந்த வீடு விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாக அதில் ஆனந்த் ராமகிருஷ்ணா தன்னுடைய மனைவி சுனிதாஉடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் சுப்ரமணியம் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணா இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.