Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “நிலுவைப்பணம் வசூலாகும்”… செலவுகளும் கொஞ்சம் இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் அனுபவ அறிவு புதிய நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி திருப்திகரமாக இருக்கும். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். மாமன் மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். இன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுனக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கும் தருணமாக இன்றைய நாள் அமையும். தொழில் சிறக்கும்.

பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சுப விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். அது மட்டுமில்லாமல் செலவுகளும் கொஞ்சம் இருக்கும். வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.

மாணவக் கண்மணிகள் பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதை ஆசிரியர்களிடம் தெளிவாக தெரிந்துகொண்டு கேட்டு அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு படிப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை  மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |