சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் சொந்த நலனை தியாகம் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். இன்று உடல் நலத்தை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். மனதில் இருந்து வந்த இனம் புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும்.
உத்தியோகத்தில் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையக் கூடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவிகளும் கிடைக்கும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகள் மட்டும் கொஞ்சம் பாடங்களைப் படிக்கும்போது நிதானத்துடனும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் இறங்குங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக முடிப்பீர்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்