Categories
உலக செய்திகள்

உக்ரைன் அரசின் அதிரடி…. விடுதலை செய்யப்பட்ட போர் பயிற்சி பெற்ற குற்றவாளிகள்…..!!

உக்ரைன் நாட்டு சிறையில் உள்ள போர் பயிற்சி பெற்ற குற்றவாளிகளை, ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிடும் நோக்கில் விடுதலை செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 7-வது நாளாக அதிகரித்து வருகிறது. மேலும் அந்நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் உக்ரைனின் தலைநகரம் கீவ்வை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உக்ரைன் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு எதிராக பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த கடுமையான போரில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், உக்ரைன் அரசு சிறையிலுள்ள போர் பயிற்சி பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட இந்த குற்றவாளிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த முடிவு சுலபமானது இல்லை என்ற போதும், பாதுகாப்பு நிலை குறித்து பார்க்கும்போது  நகரம் அதிக தாக்குதலுக்கு உள்ளாவதால் அதை பாதுகாக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையும்  நியாயமானது தான் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்

Categories

Tech |