கன்னி ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தெய்வீக சிந்தனை வளரும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கை தரம் உயரும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று தம்பதிகளுக்கு இடையே அன்பு மேலோங்கும். வாழ்க்கை துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். மனம் மகிழ்ச்சி கொள்ளும். அதே போல வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழலும் இருக்கும். தெய்வீக நம்பிக்கையும் கூடும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் இளம் சிவப்பு நிறம்