கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சட்ட விரோதமாக கூடுதல் ரோட்டை ஆக்கிரமித்து கொரோனாவை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக இந்த தகவலை தெரிவித்ததாகவும் இதனால் பிரதமர் செம டென்ஷனில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.