விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளில் ஒருமுக தன்மையுடன் செயல்பட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான வளர்ச்சிதான் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் பிடிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் அவசியம் ஆகையால் பேச்சில் மட்டும் நிதானமாக இருங்கள். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு கடுமையாக உழைப்பீர்கள். இன்று வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை தான் இருக்கும்.
உடல்நலம் ஓரளவு சீராக தான் இருக்கும். உடல் அசதி சோம்பல் நீங்கும். மருத்துவ செலவு குறையுபேச்சில் மட்டும் நிதானம். பொருளாதாரம் சீராக இருக்கும். அதேவேளையில் செலவு கொஞ்சம் அதிகரிக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சிக்கனமாக எதையும் செய்யுங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப பொறுமையாக செல்லுங்கள் அது போதும். மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள்.
கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படுவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்