Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்னால் அமைச்சரை விடுதலை செய்யவேண்டும்…. அ.தி.மு.க வினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் அவர்கள் செய்தியாளர்களிடம் இரணியல் மற்றும் குழித்துறை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருத்தல், புத்தன் அணை குடிநீர் திட்டம்  முழுமையாக நிறைவு பெறாமல் இருத்தல், நாகர்கோவில் பேரூராட்சியில் குடிநீர் பஞ்சம் நிலவி வருதல், சாலைகள் சீரமைக்கப்படாமல் இருத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தி.மு.க வினர் மீது கூறியுள்ளார்.

இதனையடுத்து குருசடி பகுதியில் வாழும் பொதுமக்கள் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் பலமுறை  கோரிக்கை விடுத்தும் அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை  எடுக்காமல் இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.  இனிவரும் எல்லா தேர்தல்களிலும் அ.தி.மு.க அரசு கட்டாயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |