Categories
தேசிய செய்திகள்

‘எய்ட்ஸ் இருக்கு’… பிரசவமான நாளில் மருத்துவமனை ஊழியரால்….பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்….!!!

மருத்துவமனை ஊழியர், கர்ப்பிணிப் பெண்ணுக்கு எயிட்ஸ் இருப்பதாக பொய் கூறியது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சோமபுரா பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நெஞ்சுவலி ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அன்றைய நாள் இரவே அந்த பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அங்கு உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவர் ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார். உடனே அப்பெண் அதனை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மருத்துவமனை ஊழியர் அந்தப் பெண்ணுக்கும், அவரின் பிறந்த குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் தொற்று இருப்பதாக பொய் சொல்லி, பீதியை கிளப்பியுள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதன்பின் எச்.ஐ.விக்கான பரிசோதனை முடிவுகளை கேட்டபோது, அந்த மருத்துவமனை ஊழியர் முன்னுக்கு பின்னாக முரணாக பேசியுள்ளார்.

இதனால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் சந்தேகமடைந்து, மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், லஞ்சம் தராத காரணத்தால்  எய்ட்ஸ் இருப்பதாக பொய் கூறியதை, மருத்துவமனை ஊழியர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |