கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சுய பெருமை பேசுவதால் சிலர் அதிருப்தி கொள்வார்கள். தொழில் வியாபார நடைமுறை சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். இன்று தூங்குவதற்கு தாமதமாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரணையாக இருப்பார்கள்.
உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நீங்கள் திறமையாக செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பு செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி கொள்ளும் நாளாகத்தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் மாணவக் கண்மணிகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கல்வியில் முன்னேறி செல்வார்கள்.
நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்