டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது தொலைநோக்கு உள்ள இந்திய அரசின் முதன்மையான திட்டமாகும்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி ஆதாரம் அளிக்கப்பட்டதாகவும், பொருளாதார அறிவு மிக்கதாகவும் உருமாற்றம் தொலைநோக்குடன் இந்திய அரசின் ஒரு முதன்மையான திட்டமாகும். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொது சேவைகளில் முழு சுற்றுச்சூழலை மாற்றும் பொருட்டு இந்திய அரசு இதனை தொடங்கியுள்ளது.
யு.பி.ஐ டிஜிட்டல் தளம் வழியாக பிப்ரவரியில் சில்லறை பரிவர்த்தனைகள் மட்டும் ரூபாய்8.27 லட்சம் கோடிக்கு நடந்துள்ளதாக நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனவரியுடன் ஒப்பிட, இது ரூபாய் 5000 கோடி குறைவு என்றாலும், சுங்க சாவடிகளில்Fastag தானியங்கி வசூல் கடந்த மாதத்தை விட ரூபாய் 30 கோடி அதிகரித்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் இந்த வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்.