Categories
உலக செய்திகள்

“ஒடனே வெளியே போங்க”….உக்ரைனில் தொடரும் போர்…. ரஷ்யா அறிவுறுத்தல்….!!

உக்ரைன் மீதான விண்ணப்ப வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெற உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி ரஷ்யா  தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்ய படைகள் நேற்று முன்தினம் கீவ் நகரில் எண்ணெய் கிடங்கு மற்றும் எரிவாயு குழாய்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எண்ணி கிடங்கு முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா 6-வது நாளாக உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படையினர் கீவ் நகரின் உளவுத் துறை அலுவலகத்துக்கு அருகே உள்ள மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் ரஷ்ய படையினர் உக்ரைன் மீதான விண்ணப்ப வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |