‘நைட் பிராங்க்’என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் 100 கோடி டாலர் மற்றும் அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர் மற்றும் பணக்காரர்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது, 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு 12 ஆயிரத்து 287 ஆக இருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா 748 பெரும் பணக்காரர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. சீனா 554 பேருடன் 2-ம் இடத்திலும், இந்தியா 145 பேருடன் 3-ம் இடத்திலும் உள்ளன.