மயிலாடுதுறை நகரிலுள்ள 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, தனியார் வேன் ஒன்று ஏற்றிக்கொண்டு, வடக்கு சாலிய தெருவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 24 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனுக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பின் ஆம்புலன்ஸ் உதவியுடன் அந்த மாணவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் மனோகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.