Categories
உலக செய்திகள்

“நீங்கள் ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள்”….. உக்ரைனின் விண்ணப்பம் குறித்து வாக்கெடுப்பு….!!

உக்ரைன் உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைன் தனியாக நின்று ரஷ்யப் படையினரை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. இந்த வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் அதிபர் ஜெலன்ஸ்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வீடியோ மூலம் பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவில் “நீங்கள் இல்லாமல் நாங்கள் தனித்து விடப்பட்டு உள்ளோம். மேலும் நீங்கள் எங்களோடு இருப்பதையும், எங்களை விட்டு போக மாட்டீர்கள் என்பதையும், உண்மையிலே ஐரோப்பியர்கள் என்பதையும் நிரூபியுங்கள். அப்போது தான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். உக்ரைனில் இருளைக் கிழித்து ஒளி பிறக்கும் மற்றும் மகிமை உண்டாகும்” என அவர் ஐரோப்பிய நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு உக்ரைனின் விண்ணப்பம் குறித்து இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |