Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துண்டு பிரசுரங்கள் விநியோகம்…. சகோதரிகள் கைது…. போலீஸ் விசாரணை…!!

புத்தக வெளியீட்டு விழாவின் போது துண்டு பிரசுரம் வினியோகம் செய்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கத்தில் உங்களில் ஒருவன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ளார். இந்த புத்தக விழாவின் நுழைவு வாயிலில் 2 பெண்கள் நின்று துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்துள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த துண்டுப்பிரசுரங்களை வாங்கி படித்துள்ளனர்.

அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டை பயன்படுத்த வேண்டும் என எழுதியிருந்தது.  இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரையை சேர்ந்த  நந்தினி மற்றும் நிரஞ்சனா என்பது அவர்கள் 2 பேரும் சகோதரிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |