Categories
உலக செய்திகள்

உச்சத்தை தொட்ட கொரோனா… அந்த நாட்டிற்கு செல்லாதீர்கள்… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்கா, ஹாங்காங்கில் பெற்றோரிடமிருந்து, பிள்ளைகள் பிரிக்கப்படும் நிலை இருப்பதால் அங்கு பயணிக்க வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹாங்காங்கில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் அங்கு பல மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசு, ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |