பிரபல நிறுவனமான நோக்கியா தற்போது ‘ பியூர்புக் புரோ லேப்டாப்’-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் மிகவும் பிரபலமான நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பின்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் தற்போது ‘பியூர்புக் புரோ லேப்டாப்’-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த லேப்டாப் 15.6 இன்ச் மற்றும் 17.3 இன் என இரண்டு விதமாகவும் அறிமுகம் செய்ய உள்ளனர்.
மேலும் இந்த லேப்டாப்பில் அலுமினியம் டாப் கவர், ரவுண்ட்டட் எட்ஜஸ், பெரிய டிரேக்பேட் (லேப்டாப் மவுஸ்), பேக்லிட் கீபோர்டு, இன்டல் கோர் i3-1220P, 8ஜிபி ரேம், 512ஜிபி SSD, 17.3 இன்ச் லேப்டாப்பில் 63Wh பேட்டரி மற்றும் 15.6 இன்ச் சாதனத்தில் 57Wh பேட்டரி ஆகிய வசதிகளும் இடம் பெற உள்ளது. நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த லேப்டாப் பிரெஞ்சு நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஆஃப் குளோபல்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதனையடுத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 22 நாடுகளில் இந்த லேப்டாப் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதனுடைய விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் இந்த லேப்டாப் மிட்-ரேஞ்ச் விலை கொண்டதாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.