விமானங்களின் எரிபொருள் விலை 3.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 7-வது நாளாக ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப். பெட்ரோலிய எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் ஒரு கிலோ லிட்டர் ரூ.3,010,87ஆக அதிகரித்து ரூ.93,530.66க்கு விற்பனையாகி வருகிறது. இந்த வருடத்தில் ஐந்தாவது முறை விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.