இந்தியாவில் Vu நிறுவனம் புதிய Vu 75 QLED Premium TV என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த பிரீமியம் டிவி ஆனது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், டால்பி விஷன், 75-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய டிவி மாடல் சற்று விலை உயர்வாகவே வெளிவந்துள்ளது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.
அதன்படி இந்த டிவியின் விலை ரூ.1,19,999 ஆக உள்ளது. குறிப்பாக இந்த டிவி மாடல் flipkart தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் குறிப்பிட்ட சில வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்குபவர்களுக்கு பிளிப்கார்ட் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த டிவி ஆனது 75 inch, 4k display மற்றும் 3,840×2,160 pixel என்ற அடிப்படையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய டிவி மாடல் 120 HZ ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் MEMC என்ற Motion Estimation and Motion Compensation தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இந்த டிவியானது சார்கோல் கிரே மெட்டல் ஃப்ரேம் மற்றும் 64 pit qurad-core processor ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த பிரீமியம் டிவி மாடல் HDR10 மற்றும் HLG தொழில்நுட்பத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.
அதேபோல் இந்த புதிய டிவி மாடலில் 2GB RAM மற்றும் 16GB internal memory வசதி உள்ளது. பின்பு google play store வசதியை கொண்டுள்ளது. அதேபோல் இந்த டிவி android 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த டிவி மாடலில் 40W ஆதரவு கொண்ட நான்கு ஸ்பீக்கர்களையும் google assitant உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த டிவி புளூடூத் v5.0 வசதியையும் கேமிங் கன்ட்ரோலர்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், கீபோர்டு மற்றும் பல சாதனங்களுடன் இணைக்கப்படலாம். டூயல்-பேண்ட் வைஃபை, நான்கு HDMI போர்ட்கள், ஆடியோ ஜாக் மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.
மேலும் inbuilt Chromecast உடன் வருகிறது. பின்பு Netflix, Amazon Prime வீடியோ,ஹாட்ஸ்டார் மற்றும் YouTube போன்ற செயலிகளை கொண்டுள்ளது. இதுதவிர பல்வேறு புதிய மற்றும் சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த Vu 75 QLED பிரீமியம் டிவி.