Categories
உலக செய்திகள்

வாழ்வா சாவா போராட்டம்…. 3ஆம் உலகப்போரில் அணு ஆயுதங்கள்…. ரஷ்யா எச்சரிக்கை…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 7-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில்  ரஷ்யா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 3-ஆம் உலகப்போர் தொடங்கினால், அதில் நிச்சயம் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அவை பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள அவர், உக்ரைனுக்கு மற்ற நாடுகள் அணு ஆயுதங்கள் அளித்தால், அதுதான் ரஷ்யாவிற்கு பெரிய ஆபத்தாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |