உக்ரைனின் தலைநகர் கீவ்விலுள்ள கோபுரங்களை ரஷ்ய படைகள் குண்டு வைத்து தகர்த்தனர்.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரேனின் கீவ் நகரில் உள்ள உளவுத் துறை அலுவலர்களுக்கு அருகே உள்ள மக்கள் வெளியேறுமாறு ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் ஒரு முக்கிய நகரமாக கருதப்படும் இந்நகரில் ரஷ்ய விமானப் படைகள் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இன்று அங்கு நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தகவலை உக்ரைன் அணியின் அவசரகால சேவை மையம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள கார்க்கியும் நகரம் ரஷ்யாவின் எல்லைக்கு மிக அருகில் இருக்கும் பகுதி ஆகும். அங்கு பெருமளவில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் தொடங்கி விட்ட நிலையில் மேலும் இன்று உக்ரைன் தலைநகர் கீவிலுள்ள கோபுரங்களை ரஷ்ய படைகள் குண்டு வைத்து தகர்த்தனர்.