உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தின் தலைமையகத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா தொடர்ந்து 7-ஆம் நாளாக கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. எனவே, உக்ரைன் அரசு, தங்களைக் காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்க்கிவிற்குள் புகுந்திருக்கிறது. அதன்பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, கார்கிவ் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தின் தலைமையகத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கட்டிடம் பாதி அழிந்துவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. தற்போது தீயணைப்பு படை வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியை மேகொண்டுள்ளனர். எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.