Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் நகரில் வசிக்கும் ராஜா யாசர் அராபத் மற்றும் ஹனிபா மரைக்காயர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |