Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் வாயிலாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு முதலான அனைத்து அன்றாட தேவை பொருட்களும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையில் இந்த ரேஷன் பொருட்களை அனைத்து ஏழை மக்களும் பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் எனும் திட்டம் ஒன்று செயல்படுத்துபட்டு வருகிறது.

தமிழகத்தில் மட்டுமே 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. எப்போதுமே ரேஷன் கடைகள் காலை 9- பகல் 12.30 மணி வரையும், மதியம் 2.30 -மாலை 5 மணி வரையும் மட்டுமே செயல்படும். ஆனால் அவ்வப்போது ரேஷன் கடைகள் திறக்க வேண்டிய நேரத்தில் சரியாக திறந்து இருப்பது இல்லை என்று மக்கள் பலரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது தொடர்பாக ஊழியர்களிடம் கேட்டபோது ரேஷன் கடைகளில் பணியாற்ற பணியாளர்கள் போதவில்லை என்று கூறினர். இதன் காரணமாக காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க தமிழக உணவுத்துறை ஒரு புதிய ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் சாசன திருத்தங்களின்படி, சென்னை மற்றும் அதனை சுற்றயுள்ள புறநகர் பகுதிகளில் காலை 8.30- பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 -மாலை 7 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் பிற பகுதிகளில் காலை 9- பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 – மாலை 6 மணி வரையிலும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நேரத்தை ஒருவரும் சரியாக பின்பற்றவில்லை. தற்போது பொதுமக்களின் நலன் கருதி இந்த நேரத்தை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |