பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு கட்டிடங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் மழை நேரத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அதுமட்டுமின்றி மண்சரிவு ஏற்படும். எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
தற்போது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தாசில்தார் மணி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் வால்பாறையில் உள்ள திருமண மண்டபங்கள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த இடங்கள் தரமானதாக இருக்கிறதா, அதில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.