Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாயில் நுரை தள்ளியவாறு கிடந்த தொழிலாளி…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவழுதிநாடார்விளை பகுதியில் அய்யாச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பந்தல் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தங்கம்மாபுரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்புலன்சில் இருந்தவர்கள் மாரியப்பனை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த முத்தையாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |