அபிஷேக் பச்சனை பழிவாங்குவதற்காக பிரியங்கா சோப்ரா செய்த காரியம் இணையத்தில் வைரல்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் உலக அழகி பட்டத்தை வாங்கி உள்ளார். இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்து பின் அழகி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இதனால் இவர் மிகவும் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து பாலிவுட்டில் படங்களில் நடித்து வெற்றிகளை தந்து வருகின்றார். தமிழன் படத்திற்கு பிறகு தமிழில் இவர் நடிக்கவில்லை. நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குறிப்பிடதக்கது. இவர் ஹாலிவுட், பாலிவுட், வெப்சீரிஸ் போன்றவற்றில் நடித்து மிகவும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா பிரபல நடிகரின் போனை திருடி இருப்பது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அபிஷேக் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பிரியங்கா சோப்ரா “he is mad” என்று கூறினார். ஒருமுறை நான் அபிஷேக் பச்சனின் போனை திருடினேன். முதலில் அவர்தான் என் போனை திருடினார் என்று கூறியுள்ளார். அந்த போனில் நடிகை ஒருவருக்கு “I miss you where have been” என்று மெசேஜ் அனுப்பினேன். அதற்கு அந்த நடிகை what is wrong with you என்று பதில் அனுப்பி இருக்கின்றார். நான் அந்த மெசேஜை அனுப்பி விட்டு போனை காரில் மறைத்து விட்டுவிட்டேன். அந்த நடிகை வேறு யாருமில்லை ப்ரீத்தி ஜிந்தா. இவ்வாறு அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.