Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்துக்கு அந்த எண்ணமே இல்லை… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் மேலாளர்…!!!

அஜித் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வலிமை திரைப்படமானது பிப்ரவரி 24 இல் வெளியாகியது. இத்திரைப்படத்தின் அம்மா பாடல் ஜெயலலிதா நினைவு நாள் அன்றும் இத்திரைப்படம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகியது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பலவிதமான செய்திகள் பரவி வருகின்றது. இது குறித்து ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளன்று வலிமையை திரைப்படம் ரிலீஸ் ஆகின்றது என்பது பற்றி நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கூறியதாவது, நண்பர் என்னிடம் வலிமை படத்தின் அம்மா பாடல் ஜெயலலிதா நினைவு நாள் அன்றும் வலிமை திரைப்படம் ஜெயலலிதா பிறந்த நாளன்றும் வெளியாகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று அவர் கேட்டிருந்தார். ஜெயலலிதாவின் மீது அஜித்க்கு அன்பு கலந்த மரியாதை இருக்கின்றது‌.

அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அம்மாவின் தொண்டர்களை ஆதரிக்க விரும்புகின்றார.? வலிமை படத்தில் இருக்கும் காட்சிகள் வசனங்கள் குறித்துதான் அரசியல் வருவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று நான் கூறினேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று வெளியாகும் வலிமை திரைப்படத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அதில் கூறியிருந்தார். அதனால் அஜித் அரசியலில் களம் இறங்குவார் என்று பேச்சுகள் வந்தன. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது குறித்து விளக்கமளித்துள்ளார். அஜித்துக்கு அரசியலில் ஈடுபடும் எந்த எண்ணமும் இல்லை. அஜித் அரசியலுக்கு வருவார் என்ற தவறான செய்திகளை இணையதளத்தில் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இதன் வாயிலாக அஜித் அரசியலுக்கு வரமாட்டார் என்பது தெரியவருகின்றது.

Categories

Tech |