வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களை தாக்கிய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் கோபந்து மாலிக் மற்றும் சூரியகாந்திதாஸ் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டைபாலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் சில பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது தங்களுடைய மொழியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த லோகேஷ், ஜீவா, சிங்காரவேலன் ஆகிய மூவரும் பெண்களை பற்றி தவறாக பேசுவதாக நினைத்துள்ளனர்.
இந்நிலையில் சிங்காரவேலன், ஜீவா, லோகேஷ் ஆகிய 3பேரும் சேர்ந்து அந்த வடமாநில வாலிபர்களை பலமாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து கோபந்து மாலிக் மற்றும் சூரியகாந்தி தாஸ் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர்களான லோகேஷ், ஜீவா, சிங்காரவேலன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.