நாடு முழுவதும் 17 துறைகளில், 50 துணைப்பிரிவுகளில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய ஸ்டார்ட்அப் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 15 முதல் கிடைக்கும். வெற்றி பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க உதவியாக இருந்தவர்களுக்கும் தூண்டியவர்களுக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.