Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய ஆபாச புகைப்படம்…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

வாட்ஸ் அப் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரட்டுபுதூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் வாலிபர் ஒருவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்களை அனுப்பி வந்துள்ளார். அந்த வாலிபரை இளம்பெண் எச்சரித்தும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனால் இளம்பெண் தரப்பில் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் மாரிமுத்து என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாரிமுத்துவை திருப்பூர் கோவில் வழியில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மாரிமுத்துவிடம் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் பணியாற்றிய போது இளம் பெண்ணின் தாயாரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் மாரிமுத்துவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |