Categories
உலக செய்திகள்

‘நாங்கள் பலமாக இருக்கிறோம்…. எங்களை யாரும் உடைக்க முடியாது’….உக்ரைன் அதிபரின் அதிரடி உரை…!!!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாங்கள் பலமாக இருக்கிறோம் என்றும் எங்களை யாரும் உடைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே நடக்கும் போரானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் இந்த போரானது இன்னும் தொடரும் எனவும் ரஷ்ய பாதுகாப்புதுறை மந்திரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றியபோது கூறியதாவது, ரஷ்யா கார்கிவ் மத்திய சதுக்கத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதல் வெளிப்படையான பயங்கரவாதம். ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடாகவும் மாறி உள்ளது.

மேலும் ரஷ்ய ஷெல் தாக்குதல் ஒரு போர் குற்றமாகும். நாங்கள் பலமாக தான் இருக்கிறோம். எங்களை யாரும் உடைக்க முடியாது. மேலும் எங்கள் நகரங்களை  முற்றுகையிட்டாலும் ,நிலம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்காக போராடுவோம். இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் நீங்கள் உக்ரைனுடன் இருப்பதை நிரூபிக்க வேண்டும்” என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |