Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்ஜோடி…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. கணவனுக்கு வலைவீச்சு…!!

இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரம்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் உமா மகேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியின் போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு செந்தாரம்பட்டியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உமா மகேஸ்வரி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தம்மம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் உமா மகேஸ்வரியின் கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |