Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. 1½ கோடிக்கு விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1½ கோடி வரை விற்பனை நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,700 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 10,276 ரூபாய்க்கும், அதிக பட்ச விலையாக 12,222 ரூபாய்க்கும், ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 9,520 ரூபாயில் இருந்து 10,299 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி 4,666ரூபாயில் இருந்து 7,299 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது.

இதேபோல் ராசிபுரம் வேளாண்மை விற்பனையாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 9,970 ரூபாயில் இருந்து 10,399 ரூபாய்க்கும், டி.சி.எச் ரக பருத்தி 9,898 ரூபாயில் இருந்து 11,899 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி 5,900 ரூபாயில் இருந்து 8,989 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் மொத்தம் 1½ கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |