Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு… தேர்வாணைய தலைவர் அதிரடி…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளை தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டிகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு 30க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் இது தவிர டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2a  தேர்தலுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் நடைபெறும் சில குளறுபடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

அதாவது திருநெல்வேலியில் தேர்வாணைய வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை வைக்கும் அரசு கருவூல பகுதியை ஆய்வு செய்த தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ,அதில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2a பணியிடங்களுக்கான தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழ் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓ.எம்.ஆர் ஷீட் தாளில்  நடக்கும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இதற்கு முன்னதாகவே தேர்வுத் தாளில் மேல் பக்கத்தில் தேர்வுகளின் சுயவிவரக் குறிப்பு இருக்கும். இந்த விபரங்கள் 2020 பிறகு தேர்வு அறையில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே தெரியவரும்.

அதேநேரத்தில் சிக்கல்களும் தவிர்க்கப்படும் எழுத்து தேர்வுகளை நேரடியாக திருத்தாமல் ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் மூலம் நிறுத்தப்படுவதால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் இம் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |