திருமணத்திற்கு பிறகு லதா ரஜினிகாந்த் செய்ததையே ஐஸ்வர்யா தனுஷுக்கு செய்ததாக இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி அறிவித்தனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்கள் பிரிவதாக அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அனைவரும் குழந்தைகளுக்காக இவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களின் சந்தோசத்திற்காகவே முடிவெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கடைசியாக சென்னையில் நைட் பார்ட்டி ஒன்று நடந்தபோது இருவரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவரும் சேர்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா திருமணம் முடிந்தவுடன் தனுஷிடம் நடந்து கொண்டது குறித்து தற்போது இணையத்தில் பரவி வருகின்றது. அது என்னவென்றால் திருமணத்திற்கு பிறகு தனுஷ் அவரின் குடும்பத்திற்கு உதவி செய்யக்கூடாது மற்றும் அவரின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று கூறியுள்ளாராம். ஆனால் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு தெரியாமல் பல நேரங்களில் அவர்களுக்கு உதவியுள்ளார். தனுஷ் உதவியது சில நேரத்தில் ஐஸ்வர்யாவுக்கு தெரிந்து பல சண்டைகள் ஏற்பட்டு இருக்கின்றது. லதா ரஜினிகாந்தும் ரஜினியிடம் இதேபோலத்தான் செய்திருக்கின்றாராம். இந்நிலையில் தனது அம்மா லதா ரஜினிகாந்தின் வழியை ஐஸ்வர்யா பின்பற்றுகிறார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.