வேன் மோதியதில் நடைப்பயிற்சி சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வி தினசரி காலையில் நடைபயிற்சி சென்று வருவார். அதுபோல செல்வி நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் செல்வி மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் வேன் ஓட்டி வந்த குமரி மாவட்டத்தில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.