பள்ளி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முட்டம் பகுதியில் பிரிமோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பதற்றமடைந்து அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் தந்தை பிரிமோஸ் வெள்ளி சந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் தனது மகளை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் தோழிகளிடம் விசாரித்தபோது மாணவியை அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மாணவியை மீட்டு தர வேண்டும் எனவும், அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியிருந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.