அஜித்தின் ரெட் படத்தின் பாடலை குறிப்பிட்டு அநாகரீக வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை.
அஜித் நடித்திருந்த ரெட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்ற பாடலை வைத்து விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவர் கூறியுள்ளதாவது so called celebrities and others… ரெட் திரைப்படத்தில் ஹீரோயினை பார்த்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்று பாடுவது எதைப் பற்றியது..? மெல்லிய உடம்புக்காரி சிம்மான உடம்புக்காரி என்று கூறாமல் ஒல்லி, குண்டு என பிறரின் உருவத்தை பற்றி பாடும் போது நீங்கள் எங்கே சென்றீர்கள்? இப்பாடலில் இடம் பெற்ற ஒவ்வொரு வரிகளையும் குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறார் ப்ளூ சட்டை.
#ValimaiReview #Valimai #AjithKumar #Thala pic.twitter.com/gvcfdhHaHR
— Blue Sattai Maran (@tamiltalkies) March 2, 2022
இப்பாடலானது கற்பனையல்ல. ஆணாதிக்கம் நிறைந்த பாடல் என்று கூறியுள்ளார். உருவ கேலி படமெடுக்கும் வெண்ணைகள்… திராணி இருந்தால் இப்படி கொச்சையாக பாடல் எழுதுவோர்… கதை எழுதுவோர்… அதில் நடிப்போர் உள்ளிட்டோரை கண்டியுங்கள்… இல்லா விட்டால் மூடிக் கொண்டு இருங்கள்… என கடுமையாக விமர்சித்திருக்கின்றார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் கண்டுபடி டேஷ் வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.