விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக மாநில அரசு சார்பாக மானிய உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக அரசு தரப்பிலிருந்து மானியம் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் உதவி வழங்கும் பணியை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்துள்ளார். கடந்த வாரத்தில் விவசாயிகள் பலருக்கு மானிய உதவி வழங்கப்பட்டது.
இதில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மையமாக வைத்து விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் மானியத் தொகையாக ரூபாய் 1.84 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இத்திட்டம் குறித்து அம்மாநில வேளாண் துறை அமைச்சரான ராகுல் கூறுகையில், விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளிடம் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வேளாண் துறைக்கு வந்துள்ளதாகவும், ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்காக அரசு தரப்பில் இருந்து 15 கோடி எடுத்து வைக்கப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் மானிய திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன் விலையில் 40 % மானியமாக வழங்கப்படுகிறது. அதில் அதிகபட்சமாக 60,000 வரையில் மானியம் கிடைக்கும். மேலும் விவசாயிகள் ரூபாய் 15,000 வரை விலை கொண்ட ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு வேளாண்மை தொடர்பான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், சந்தை வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காகவும், வேளாண் பொருட்களை விற்பனை செய்யவும் உதவும் என கூறப்பட்டுள்ளது.