சென்னை உயர்நீதிமன்றம் அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கும் குறிப்பிட்ட சதவீதம் அளவில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுவரை மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு பணியிடங்களில் எந்த ஒரு இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு வயது வரம்பு சலுகையுடன் மேலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, பெண்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் பாலினத்தவருக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் மூன்றாம் பாலினத்தவருக்கு எதிர்காலத்தில் அரசு பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமில்லாமல் சதவீதம் இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.