ரஷ்யா- உக்ரைன் இடையேயான மோதலானது தற்போது போராக வெடித்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாடு ரஷ்யா படைகளின் தாக்குதலுக்கு சிக்கி, சின்னாபின்னமாகி வருகிறது. மேலும் பல நகரங்களில் ரஷ்ய தாக்குதல் அதிகரித்து, தலைநகர் கீவ்வை பிடிக்கும் முயற்சிகளை உக்குரைன் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனுக்கு படிப்பதற்காக சென்றிருந்த நிலையில், மீண்டும் தாயகத்துக்கு திரும்ப கடும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேறி வருகின்றனர்.
மத்திய அரசு இந்திய மாணவர்களை உக்ரைன் நாட்டுக்குள் போய் மீட்க முடியாத நிலையில், அந்நாட்டின் அக்கம் ,பக்கத்து நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் வந்து, அங்கிருந்து விமானம் மூலம் தாயகத்திற்கு திரும்ப வசதிகளை செய்துள்ளது. இருந்தாலும் மாணவர்கள் அங்கிருந்து மீண்டு வருவது, அத்தனை சுலபமான விஷயம் இல்லை என்றும் கடும் சிரமத்திற்கு மத்தியில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு வந்ததாக டெல்லி வந்து சேர்ந்த சுபான்ஷு என்ற மாணவர் அங்கு நடக்கின்ற நிலவரம் குறித்து விளக்கியுள்ளார்.
அவரது தாய் மீண்டு வந்த மகனை கட்டிபிடித்து அணைத்து கொண்டு நிற்க சுபான்ஷு நடந்ததை விவரிக்கிறார். நாங்கள் வின்னிட்சியா என்ற நகரிலிருந்து எல்லைக்கு வந்த பயணம் மிகவும் கொடுமையானது. எங்களது காண்ட்ராக்டர்கள் பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். ஆனாலும் இடையில் 12 கிலோமீட்டர் தூரம் நாங்கள் நடக்க வேண்டியிருந்தது. எங்களுக்கு நடப்பது கூட ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் ரோமானிய நாட்டு எல்லைக்கு வருவது தான் மிகவும் கடினமாக இருந்தது எனவும் அதிக சிரமப்பட்டுதான் எல்லையை தாண்ட முடிந்தது.
மேலும் மாணவர்கள் பலரும் எங்களை எப்படியாவது எல்லையை தாண்டிச் செல்ல விடுங்கள் என்று கதறி அழுதனர். பெண் பலர் மயங்கி விழுந்தனர் மற்றும் சிலர் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் எங்களுக்கு எந்தவித துன்புறுத்தலும் நேரவில்லை. எனினும் உக்ரேனிய படையினர் சிலரை தாக்கியதை பார்த்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவர்களை துப்பாக்கியின் பின்பகுதியால் குத்தி கீழே தள்ளி உதைத்தனர். மேலும் எல்லை கதவுகள் திறக்கப்பட்டவுடன் உக்ரைன் நாட்டினர் தான் முதலில் அனுப்பப்பட்டனர்.
அதன் பின்புதான் எங்களை அனுமதித்தனர். இதையடுத்து எல்லை தாண்டி வந்ததும் ரொமேனியாவுக்குள் வந்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டனர். அதன் பின்புதான் எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. மேலும் உக்ரைனில் கிட்டதட்ட 16,000 மாணவர்கள் உள்ளதாகவும், அவர்களில் பலர் பங்கர்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ஷெல்டர்களில் தங்கியுள்ளனர் என்றும் கூறினார். ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து உக்கிரமடைந்து வருவதால் அவர்களை அதிலிருந்து,அம்மாணர்வர்கள் தப்ப முயல்வதற்கு தவிக்கின்றனர். எனினும் கிட்டத்தட்ட இதுவரை 10,000 மாணவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.